Tuesday, December 24, 2024
HomeLatest Newsபெண்களே உள்ளாடைகளை களையுங்கள் - தினசரி சோதனை செய்யும் பிரபல நிறுவனம்..!

பெண்களே உள்ளாடைகளை களையுங்கள் – தினசரி சோதனை செய்யும் பிரபல நிறுவனம்..!

நிறுவனம் ஒன்று தினசரி தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களின் ஆடைகளை களைந்து சோதனை நடத்தி வருவது அனைவரையும் திகைப்படைய செய்துள்ளது.

ரஷ்யாவில் இருக்கும் மிகப் பெரிய ஆன்லைன் நிறுவனமான வைல்ட்பெர்ரியிலே இந்த சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிறுவனத்தை நடத்தி வரும் 47 வயதான டாட்டியானா பகல்ச்சுக் ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பதுடன் ஆங்கில ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். புடினின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வந்த பின்னர் இவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

அவரது நிறுவனத்தில் வேர்ஹவுஸில் இருந்து விலையுயர்ந்த மொபைல் அல்லது வாட்ச்சை ஊழியர்கள் திருடிச் செல்வதைத் தவிர்க்கவே இவ்வாறு தினசரி உள்ளாடை வரை ஆடைகளைக் களைந்து தேடுதல் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

பெண்களை மட்டுமன்றி ஆண் ஊழியர்களையும் இது போன்றே சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

உக்ரைன் போர் காரணமாகப் பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள போதிலும் அவற்றினை எல்லாம் கடந்து முறைகேடான முறையில் சில இறக்குமதிகளைச் செய்து டாட்டியானா பெரிய லாபத்தை ஈட்டுவதாக கூறப்படுகினறது.

குறித்த காணொளிகளானவை இணையத்தில் பரவி வருவதுடன் இணைய வாசிகளின் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

இது ஊழியர்களின் கண்ணியத்திற்கு எதிரானது என்பதுடன் ஊழியர்களை மன ரீதியாகப் பாதிக்கும் என்றே பலரும் சாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News