ஆற்றில் உறையும் தண்ணீரில் எந்தவொரு ஆடைகளும் இன்றி நீச்சலடிக்கும் விநோத நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றிலே உறையும் தண்ணீரில் இரண்டாயிரம் பேர் ஆடைகளின்றி நீச்சலடித்துள்ளனர்.
ஆண்டிலே ஜூன் மாதம் 22 ஆம் திகதி குறைந்தளவு பகல் பொழுதை கொண்ட நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
அந்த அடிப்படையில் ஆடைகள் இல்லாத இந்த விநோத நீச்சல் கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும், தற்பொழுது நடத்தப்பட்ட நீச்சல் நிகழ்வில் 3 டிகிரி கடுங்குளிரையும் பொருட்படுத்தாது ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.