உடலுறவு என்றாலே இரகசியமான விடயமாக பெரும்பாலானோர் நினைத்து வாழும் நிலையில் அதனை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து சுவீடன் நாட்டில் போட்டியை நடாத்தவுள்னர்.
உடலுறவை போட்டியாக அங்கீகரித்த முதல் நாடாக சுவீடன் பெயரைப் பெறுவதுடன் அதற்கு “ஐரோப்பியன் செக்ஸ் சம்பியன்ஷிப்” என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இப் போட்டியானது எதிர்வரும் 8 ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் பல வாரங்கள் நடாத்தப்படவுள்ளது.
இதில் போட்டியிடுபவர்கள் தினமும் 6 மணி நேரம் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். இதை விட துணையைக் கவர்தல் , உடல் மசாஜ் , வாய்வழி பாலியல் , சகிப்புத்தன்மை என 6 பிரிவுகளாக போட்டி நடாத்தப்படவுள்ளது.
இதனை சுவீடன் செக்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்துள்ளதுடன் இதற்குரிய வெற்றியாளர்களைத் தெரிவு செய்வதில் 70 சதவீத வாக்குகள் பார்வையாளராலும் 30 சதவீத வாக்குகள் நடுவர்களாலும் தீர்மானிக்கப்படும்.
இதுவரை ஐயோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து 20 பேர் வரையில் விண்ணப்பித்துள்ள நிலையி்ல் இப் போட்டி.தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலர் ஆதரவான கருத்துக்களையும் எதிரான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.