Tuesday, December 24, 2024
HomeLatest Newsமெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு!

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு!

மெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுவாமி விவேகானந்தரின் சிலையை இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார்.

இது குறித்து ஓம் பிர்லா வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில்,

“மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன். லத்தீன் அமெரிக்காவில் சுவாமிஜியின் முதல் சிலை இதுவாகும்.

இச்சிலை மக்களுக்கு, குறிப்பாக இப்பகுதி இளைஞர்களுக்கு, மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் உத்வேகமாக இருக்கும். நமது நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். ‘சுவாமிஜியின் செய்தி மற்றும் மனிதகுலத்திற்கான போதனைகள் புவியியல் கட்டுப்பாடுகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது. அவரது செய்தி முழு மனித குலத்திற்கும் உள்ளது.

இன்று மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைத்து அவருக்கு பணிவான அஞ்சலி செலுத்துகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

Recent News