குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு நாட்டின் உயரிய விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சுரினாம் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்’ விருதே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக சுரினாம் சென்றுள்ளார்.
அவர், 1873 ஆம் ஆண்டு சுரினாமுக்கு கப்பல் மூலம் இந்தியர்கள் சென்றதன் 150 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கலாச்சார விழாவில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
அந்த விழாவில் திரௌபதி முர்முவிற்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள்ளது.
இதையடுத்து அவர், தமக்கு வழங்கப்பட்டுள்ள சுரினாம் நாட்டின் உயரிய விருதை இந்திய மற்றும் சுரினாமியர் சமூகத்திற்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிற்கும் சுரினாமுக்கும் இடையே கலாசார ஒற்றுமைகள் இருப்பதாகவும், சுரினாம் நாட்டிற்கு வருகை தந்திருப்பது தமது சொந்த வீட்டிற்கு வந்திருப்பதைப் போன்று இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.