இலங்கை, உரிய நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியளிப்பு வசதியைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை பரிசீலிக்கத் தயார் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
பெரிஸ் கிளப்பின் அங்கத்தவர் என்ற வகையில் இந்த ஆதரவை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.
பெரிஸ் கிளப் மற்றும் பெரிஸ் கிளப் அல்லாத கடன் வழங்குநர்களுக்கு இடையிலான முன்மொழியப்பட்ட ஒருங்கிணைப்பு தளத்துக்கு பிரித்தானியா முழு ஆதரவளிக்கிறது.
இது இலங்கையில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும் என்று தாம் நம்புவதாக பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் ஆன்-மெரி ட்ரெவெல்யன், (Anne-Marie Trevelyan ) அந்த நாட்டின் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.