Monday, February 24, 2025
HomeLatest Newsதிடீரென வானிற்கு தூக்கி வீசப்பட்ட வாகனம்- வைரலாகும் புகைப்படங்கள்!

திடீரென வானிற்கு தூக்கி வீசப்பட்ட வாகனம்- வைரலாகும் புகைப்படங்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மகிழுந்து ஒன்று தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.

கார் விபத்து அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த பிக்அப் டிரக்கில் இருந்து கழன்ற டயர் ஒன்று, கருப்பு நிற மகிழுந்து ஒன்றின் மீது மோதியதில் கார் வானில் தூக்கி வீசப்பட்டது.

அதே நேரத்தில், டிரக்கில் இருந்து வெளியேறிய டயர் மகிழுந்தை மீண்டும் பின்புறமாக தாக்கியது.

மார்ச் 23ம் திகதி அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சாட்ஸ்வொர்த்தில்(Chatsworth) உள்ள ஃப்ரீவே 118 ல் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் அவர் காரில் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் பெரிய காயங்கள் எதுவும் இன்றி உயிர் பிழைத்தாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent News