புனேயில் மின்சார ஸ்கூட்டர் எரிந்து தந்தை மகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மின்சார வாகனம் பயன்படுத்துவோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Ola S1 ஸ்கூட்டர், பரபரப்பான சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. முதலில் இருக்கைக்கு அடியில் இருந்து புகை வெளியேறியது. பின்னர் சில வினாடிகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் குறித்து ஓலா நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது:
எங்கள் ஸ்கூட்டர் ஒன்றில் புனேவில் நடந்த ஒரு சம்பவம் குறித்து அதன் மூல காரணத்தைப் புரிந்து கொள்ள விசாரணை மேற்கொண்டுள்ளோம். அடுத்த சில நாட்களில் இதுதொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வோம். வாடிக்கையாளருடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுத்து, வரும் நாட்களில் மேலும் தகவலை பகிர்ந்து கொள்வோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் வேலூரில் மின்சார வாகனம் வெடித்து தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் நினைவில் இருந்து மறைவதற்குள் அடுத்த மின்சார வாகனம் தீப்பிடித்தது மின்சார வாகனம் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.