Thursday, January 23, 2025
HomeLatest Newsயாழில் திடீர் திருப்பம்; ஜே.வி.பியுடன் கைகோர்த்த கூட்டமைப்பினர்!(படங்கள் இணைப்பு)

யாழில் திடீர் திருப்பம்; ஜே.வி.பியுடன் கைகோர்த்த கூட்டமைப்பினர்!(படங்கள் இணைப்பு)

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட மாநாடு இடம்பெற்றிருந்தது .

இந்நிகழ்வானது இன்று யாழ் மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள ஞானம்ஸ் ஹோட்டலில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்திருந்தது .

மேலும் இந்நிகழ்வில் ஜே.வி.பி இன் அமைப்பாளர்கள்,ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா , சுரேஷ் பிரேமச்சந்திரன் ,வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர் .

Recent News