Monday, February 24, 2025
HomeLatest Newsஅட்டுலுகம சிறுமி படுகொலையில் திடீர் திருப்பம்;குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்!

அட்டுலுகம சிறுமி படுகொலையில் திடீர் திருப்பம்;குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்!

பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்த சிறுமியை தாமே கொலை செய்துள்ளதாக குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து தாமே கொலை செய்துள்ளதாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 27 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் புதையுண்ட நிலையில் சடலம் பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து இன்று பிரதே பரிசோதனை இடம்பெற்றன.

இந்த நிலையில் உயிரிழந்த 9 வயது சிறுமியின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபடவில்லை என பிரேத பரிசாதனை வாயிலாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News