Monday, December 23, 2024
HomeLatest Newsமைனா மீது போடப்பட்ட திடீர் வழக்கு-பிக்பாஸ் வெளியிட்ட அறிவிப்பு-வெளியானது ப்ரோமோ

மைனா மீது போடப்பட்ட திடீர் வழக்கு-பிக்பாஸ் வெளியிட்ட அறிவிப்பு-வெளியானது ப்ரோமோ

குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என ஆரம்பித்த முதல் சீசனிற்கு கிடைத்த மாபெறும் வெற்றி இப்போது 6வது சீசன் வரை வந்துள்ளது. இப்போது 6வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த சீசனில் மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகங்கள் உள்ளனர்.

சிலர் புதியவர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இதுவரை வீட்டில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி என 6 பேர் வெளியேறிவிட்டார்கள்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நீதிமன்றம் டாஸ்க் இடம்பெறுகின்றது.இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் வீட்டில் சாப்பிடும் தட்டினை கழுவாததற்காக கதிரவன் மைனா மீது வழக்கு தொடர அதற்கு பிக்பாஸ் மறுப்பு தெரிவித்து அவர் தலைவர் நீங்கள் அவர் மீது வழக்கு தொடர முடியாது வேற யாரும் மீது தொடருங்கள் எனக் கூற அவர் பொதுவழக்காக அதை பதிவு செய்தார்.

இந்த விடயத்தை வெளியில் வந்து சொல்ல தனலட்சுமி அது எப்படி முடியும் என சண்டை பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்.இதோ அந்த ப்ரமோ…

Recent News