Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsரஷ்யாவால் உக்ரைனைக்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்..!

ரஷ்யாவால் உக்ரைனைக்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்..!

உக்ரைனின் 30 சதவீத நிலப்பரப்பில் ரஷ்ய வீரர்கள் விட்டுச் சென்ற வெடிப் பொருட்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டி உள்ளது என  அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கிட்டத்தட்ட 19 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்,  உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் ரஷ்ய படை கட்டுப்பாட்டில் வைத்து இருந்த பல பகுதிகளை உக்ரைனிய படைகள் எதிர் தாக்குதல் நடத்தி மீண்டும் கைப்பற்றி வருகின்றனர்.

சமீபத்திய போர் நிலவரத்தின் படி, இருநாடுகளும் அதிக அளவிலான வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் சென்ற 30 சதவீத உக்ரைனிய நிலப்பரப்பு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருப்பதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் ரஷ்ய வீரர்கள் விட்டுச் சென்ற வெடிப் பொருட்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டி உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் அடிப்படையில், கார்கிவ், கெர்சன் மற்றும் மைகோலேவ் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News