Friday, January 17, 2025
HomeLatest Newsகிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் மருத்துவமனையில்

கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் மருத்துவமனையில்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று குளவி கொட்டுக்குள்ளான 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளினாால் குளவிக் கூடு ஒன்று கலைக்கப்பட்ட நிலையிலேயே குளவிகள் கலைந்து சென்று மாணவர்களைக் கொட்டியுள்ளன.

இதனையடுத்து உடனடியாக சமுர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் பாதிக்கப்பட்ட 25 மாணவர்களும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் விடுதிகளுக்கு அனுப்பபட்டு
சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Recent News