Saturday, January 25, 2025
HomeLatest Newsபல்கலைக்கழக பட்டப்படிப்பை கைவிடும் மாணவர்கள்- வெளியான அதிர்ச்சித் தகவல்!

பல்கலைக்கழக பட்டப்படிப்பை கைவிடும் மாணவர்கள்- வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங் களில் நடத்தப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கடந்த 15 ஆண்டுகளில் தங்கள் சிரேஷ்ட மாணவர்களின் கொடூரமான பகிடிவதை காரணமாக 9,834 பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பை கைவிட்டுள்ளனர்.

அத்துடன் 9,903 மாணவிகள் தாங்கள் சிரேஷ்ட மாணவர்களால் பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாகியுள்ளனர் என்று ஒரு முறைசாரா கணக்கெடுப்பு வெளிப் படுத்தியுள்ளதாக, குருநாகல் மாவட்ட பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஏ.எம். ஜயசிங்க பண்டார குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற பாடசாலை அதிபர்கள் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளதாக செண்டே ஒப்சேர்வர இதழ் தெரிவித்துள்ளது.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் முதல் கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறை யைப் பிறர் பறிக்கவும் அரச பல்கலைக்கழகங்களில் தவறாக வழிநடத்தப்பட்ட சிரேஷ்ட மாணவர்கள் முன்னணியில் இருந்தனர்.

தனியார் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை அனுமதிக்கப் படாததால், அரச பல்கலைக்கழ கங்களில் நடக்கும் கொடூரமான மற்றும் அநாகரீகமான பகிடி வதை குறித்து விரக்தியடைந்த பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் பிள்ளை களை தனியார் பல்கலைக்கழ கங்களில் படிக்க ஊக்குவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் சிரேஷ்ட மாணவர்களால் கொடூரமான முறையில் பகிடிவதைக்கு ஆளான 5,806 மாண வர்கள் ஏற்கனவே நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழ கங்களில் உயர் கல்வி நடவடிக் கைகளை ஆரம்பித்துள்ளனர்.

பல தசாப்தங்களாக, அரச பல்கலைக்கழகங்களில் கொடூர மான பகிடிவதை நடைபெற்று வருகிறது.

மேலும்,இதுவரை 195 பட்டதாரி மாணவர்கள் தற்கொலை செய்துகொண் டுள்ளனர் அல்லது வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றுள்ளனர். இந்த அவலங்களுக்கு யார் பொறுப்பேற்பது?

இத்தகைய ஈடு செய்ய முடியாத இழப்புகளால் பெற் றோர்களும் மாணவர்களும் மட்டுமே பாதிக்கப்படுகின் றனர். ஏழைப் பெற்றோர்கள் தங்களுடைய சொத்துக்களை அடமானம் வைத்து அல்லது அரசு வங்கிகளில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி தங்கள் பிள்ளைகளை அரசுப் பல்கலைக்கழகங்களில் படிக்கத் தகுதிபெறச் செய்வதன் மூலம் அதிகப் பணத்தைச் செலவி டுகிறார்கள்.

இறுதியில், இந்த மனிதாபிமானமற்ற, பைத்தியம் பிடித்த அரக்கர்கள், மீட்பர்கள் போல் நடிக்கும் இந்த நாட்டில் உள்ள இளைஞர்களின் வாழ்க் கையையும் எதிர்காலத்தையும் நாசமாக்குகிறார்கள்.

இந்த ஆரோக்கியமற்ற மற்றும் மிகவும் மோசமான, சோகமான போக்கு தொடர்ந் தால், எதிர்காலத்தில் தங்கள் உயிரை நேசிக்கும் எந்த மாண வர்களும் அரச பல்கலைக்கழகங்களில் படிக்க முன் வர மாட்டார்கள், ஏனெனில் பெற் றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை அரச பல்கலைக் கழகங்களின் பட்டப்படிப்பு சான்றிதழை விட அதிகமாக மதிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

Recent News