Tuesday, December 24, 2024
HomeLatest Newsமாணவர் விசா; பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

மாணவர் விசா; பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

மாணவர் விசா தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாணவர் விசாக்களுக்கு முன்னுரிமை மற்றும் உயர் முன்னுரிமை விசாக்கள் கிடைப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த சில வாரங்களில் அதிக தேவையை நாங்கள் எதிர்பார்க்கிறோம், எனவே உங்கள் விசாவிற்கு விரைவில் விண்ணப்பிக்குமாறு பரிந்துரைக்கிறோம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், துணை ஆவணங்களைத் தயார்படுத்துவதற்கு செயல்முறை நேரம் எடுக்கும் என்பதை நினைவூட்டிய பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், விண்ணப்பதாரர்களை விரைவில் தொடங்குமாறு வலியுறுத்தியது.

Recent News