Monday, January 13, 2025
HomeLatest Newsகோட்டா கோ கமவில் தொடரும் போராட்டம் – இன்றுடன் 20 நாட்கள் நிறைவு!

கோட்டா கோ கமவில் தொடரும் போராட்டம் – இன்றுடன் 20 நாட்கள் நிறைவு!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் 20ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகைத் தரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இரவு கடும் மழைக்கு மத்தியிலும் கோட்டா கோ கமவில் தொடர்ச்சியாக பல கோசங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News