Friday, January 24, 2025
HomeLatest NewsWorld Newsதீவிரமாக வலுப்பெறும் ரீமால் புயல் - இன்று ஏற்படப்போகும் ஆபத்து !மக்களே அவதானம் !

தீவிரமாக வலுப்பெறும் ரீமால் புயல் – இன்று ஏற்படப்போகும் ஆபத்து !மக்களே அவதானம் !

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ரீமால் புயலானது இன்று மாலை தீவிரப் புயலாக வலுபெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது .நேற்று முன்தினம், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டு இருந்தது.மேலும் அது நேற்று வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு ரீமால் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தற்போது இந்த ரீமால் புயலானது மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் நிலையில் வடக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தீவிரப் புயலாக வலுபெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது .பின்னர், நாளை நள்ளிரவு வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காள கடற்கரையை கடக்கக்கூடும் எனவும்
இந்த புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டிற்கு மழை வாய்ப்பு என்பது குறைவாக இருக்குமெனவும்
அதற்கு மாறாக, தமிழ்நாட்டின் நிலவும் வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று இந்திய வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recent News