Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsபிச்சை எடுத்து பிழைப்பதை நிறுத்துங்கள் - ராணுவ தளபதி வலியுறுத்தல்..!

பிச்சை எடுத்து பிழைப்பதை நிறுத்துங்கள் – ராணுவ தளபதி வலியுறுத்தல்..!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது.


உணவு, மின்சாரம் மற்றும் எரிசக்தி உட்பட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் அங்கு மக்கள் திண்டாடி வருகின்றனர். வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது. நிலைமையை சரி செய்யும் முயற்சியில் அந்நாடு பல உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது.


இந்நிலையில் பாகிஸ்தானின் ராணுவ தலைவர் சையத் அசிம் முனிர், சுயசார்புடைய நாடாக பாகிஸ்தான் மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி மேலும் அவர் கூறியதாவது பாகிஸ்தானியர்கள் அடிப்படையில் பெருமை, வைராக்கியம் மற்றும் திறமை கொண்டவர்கள்.

தற்போது உள்ள பிச்சை எடுக்கும் எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். ராணுவம் தனது பலத்தை மக்களிடமிருந்து பெறுவதுபோல் மக்களும் ராணுவத்தால் பலம் பெறுகின்றனர். தற்போது நிலவும் நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீளும் வரை ராணுவம் ஓயப்போவதில்லை.

நாடு விவசாய புரட்சியை சந்திக்கும். சிறு விவசாயிகள் பயன்பெறவும், பசுமை முயற்சிகளின் நோக்கத்தை பரப்பவும் நவீன தரத்திற்கு ஏற்ற மாதிரி பண்ணைகள் நாடு முழுவதும் நிறுவப்படும் என கூறினார்.

Recent News