Sunday, January 26, 2025
HomeLatest Newsஅனர்த்தங்கள் தொடர்பாக அறிவிக்க நவீன தொழில்நுட்ப முறை-அனர்த்த முகாமைத்துவ நிலையம்..!

அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிக்க நவீன தொழில்நுட்ப முறை-அனர்த்த முகாமைத்துவ நிலையம்..!

எதிர்காலத்தில் நிகழ கூடிய அனர்த்த அபாய நிலைகளை மக்களுக்கு அறிவிப்பதற்காக நவீன தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை ஏற்றுக்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மை காலங்களின் நிலநடுக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அதன் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, இந்த நாட்களில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ள வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் மக்களைக் கேட்டு கொண்டுள்ளார்.

அத்துடன் , இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Recent News