Saturday, January 11, 2025
HomeLatest Newsமீண்டும் குழப்பம் நிலை; அமைச்சரவை பதவியேற்பு ஒத்திவைப்பு!

மீண்டும் குழப்பம் நிலை; அமைச்சரவை பதவியேற்பு ஒத்திவைப்பு!

நாட்டில் நிலவும் அரசியற் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆளும் கட்சி அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்த நிலையில் அமைச்சரவை தொடர்பில் ஆளும் கட்சிக்குள்ளும் பாராளுமன்றிலும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் சில தினங்களுக்கு முன் தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பீரிஸ், அலிசப்ரி ஆகிய நால்வருக்கு மட்டும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை மேலும் சிலர் இன்றையதினம் அமைச்சரவை அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை பதவியேற்பு திடீரென பிற்போடப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Recent News