Friday, April 4, 2025
HomeLatest Newsபிளாங்க் நிலையில் நின்று முதியவர் சாதனை...!திணறும் வாலிப வட்டாரங்கள்..!

பிளாங்க் நிலையில் நின்று முதியவர் சாதனை…!திணறும் வாலிப வட்டாரங்கள்..!

பிளாங்க் நிலையில் நின்று முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஜோசப் என்ற முதியவரே பிளாங்க் நிலையில் நின்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பிளாங்க் என்பது கை, கால்களை நேராக ஊன்றி வயிற்று பகுதியை சம நிலையில் வைத்திருக்கும் பயிற்சி ஆகும்.

இந்நிலையில் குறித்த முதியவர் பிளாங்க் நிலையில், 9 மணி நேரம் 38 நிமிடங்கள் 47 வினாடிகள் நின்று உலக சாதனை படைத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் நிகழ்த்திய கின்னஸ் சாதனையை தற்போது ஜோசப் முறியடித்துள்ளார்.

முதியவரான ஜோசப் விளையாட்டு வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News