Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஜெர்மனியில் கத்தி குத்து தாக்குதல் - அலறி ஓடிய மக்கள் !!!

ஜெர்மனியில் கத்தி குத்து தாக்குதல் – அலறி ஓடிய மக்கள் !!!

ஜெர்மனியில் பொதுமக்கள் மீது ஒரு நபர் திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்த தொடங்கினார்.இந்த சம்பவம் தென்மேற்கில் அமைந்துள்ள மன்ஹெய்ம் நகரின் மையப்பகுதியில் மார்க்பிளாட்ஸ் சதுக்கத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அங்கிருந்த மக்கள் அலறிடித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து போலீசார் உடனடியாக செயல்பட்டு கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இனி பொதுமக்களுக்கு எந்த அபாயமும் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Recent News