Saturday, May 18, 2024
HomeLatest Newsஇலங்கையின் ரோபோ மூலம் இயக்கப்படும் சேலைன் உற்பத்தி ஐரோப்பிய சந்தைக்கு!

இலங்கையின் ரோபோ மூலம் இயக்கப்படும் சேலைன் உற்பத்தி ஐரோப்பிய சந்தைக்கு!

இலங்கையின் ரோபோ மூலம் இயக்கப்படும் முதல் சேலைன் உற்பத்தி ஆலை ஐரோப்பிய தர சான்றிதழைப் பெற்று ஐரோப்பிய சந்தையை ஆக்கிரமிக்கத் தயாராகிறது.

பல்லேகலையில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச் சபையினால் ஸ்தாபிக்கப்பட்ட இத்தொழிற்சாலையானது 24 மணிநேரமும் முழுக்க முழுக்க ரோபோ தொழில்நுட்பத்துடன் இயங்குவது விசேடமாகும்.

09 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சேலைன் தொழிற்சாலையில் வருடாந்தம் 55 மில்லியன் சேலைன் போத்தல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது, ​​இலங்கையின் வருடாந்த சேலைன் தேவை 15 மில்லியன் போத்தல்களாக உள்ளதுடன், அந்த தொழிற்சாலையிலிருந்து உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது இத்தொழிற்சாலையின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் ஐரோப்பிய சந்தையை கைப்பற்றும் நோக்கில் தொழிற்சாலைக்கான ஐரோப்பிய தர சான்றிதழை பெற்றுக்கொள்ள நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Recent News