Sunday, January 26, 2025
HomeLatest Newsபிட்ச் தரப்படுத்தலில் தரமிறக்கப்பட்ட இலங்கையின் முன்னணி நிறுவனங்கள்!

பிட்ச் தரப்படுத்தலில் தரமிறக்கப்பட்ட இலங்கையின் முன்னணி நிறுவனங்கள்!

இலங்கையின் 10 வங்கிகள், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட லக்தனவி லிமிடெட் ஆகியவற்றின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் தரமிறக்கியுள்ளது.

பிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனத்தின் அண்மைக்கால இறையாண்மை குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்தே இலங்கையின் 10 வங்கிகளது தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரமிறக்கியுள்ளது.

1 டிசம்பர் 2022 அன்று ஃபிட்ச் இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய வழங்குனர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ‘CC’ இலிருந்து ‘CCC’க்கு தரமிறக்கியதைத் தொடர்ந்து, இலங்கை வழங்குநர்களிடையே ஒப்பீட்டு கடன் தகுதியில் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் தேசிய மதிப்பீட்டை AA மறை தரத்தில் இருந்து B தரத்துக்கும், ஸ்ரீலங்கா டெலிகொம்மின் தேசிய மதிப்பீட்டை AA மறையில் இருந்து A தரத்துக்கும், பிட்ச் தரமிறக்கியுள்ளது.

Recent News