Friday, November 15, 2024
HomeLatest Newsசெப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டும்!

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டும்!

இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டக்கூடும் என்பதோடு அதன் பின்னர் அது குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

மின்கட்டண மாற்றங்களால் படிப்படியான உயர்வு இருக்கும் என்றும், எனினும், முன்னர் அறிவித்தது போல் பணவீக்கம் 70% அளவை எட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்

மேலும் இலங்கை மத்திய வங்கி 2022 ஆம் ஆண்டிற்கான அதன் நாணயக் கொள்கை மீளாய்வு இலக்கம் 6 இல், பணவீக்கத்தின் வேகம் எதிர்பார்த்ததை விட வேகமாக மிதமானதாக இருக்கும் என கூறியுள்ளது எனவும் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை உலகளாவிய உணவு மற்றும் பிற பொருட்களின் விலைகளில் எதிர்பார்க்கப்படும் இயல்புநிலை புள்ளியியல் அடிப்படை விளைவு, உள்நாட்டு விநியோக நிலைமைகளில் எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகள் ஆகியவற்றின் விளைவாக மொத்த தேவை அழுத்தங்கள், தலையீட்டு பணவீக்கம் முன்னோக்கிச் செல்ல மிதமானதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Recent News