Thursday, January 23, 2025
HomeLatest Newsஉச்சத்தை எட்டிய இலங்கையின் பணவீக்கம் !

உச்சத்தை எட்டிய இலங்கையின் பணவீக்கம் !

இலங்கையின் அனைத்து பொருட்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் 5.8 விகிதத்தினால் அதிகரித்துள்ளது.

2022 செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே அந்த அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பொருட்களுக்கான பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 250.4 புள்ளிகளாக இருந்தது.

எனினும் அது செப்டம்பர் மாதத்தில் 256.2 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

இது அதிகரிப்பு சந்தை பொதியில் செலவீனத்தை 1879 ரூபாவால் உயர்த்தியுள்ளது.

இதேவேளை உணவு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 84.6 விகிதத்தில் இருந்தநிலையில் செப்டம்பர் மாதம் 85.8 விகிதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் உணவல்லா பொருட்களின் பணவீக்கம் 57.1 விகிதத்தினால் அதிகரித்துள்ளது.

Recent News