Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇலங்கையில் முதல் முறையாக உலக இரட்டையர் அழகுராணி, ஆணழகன் போட்டி!

இலங்கையில் முதல் முறையாக உலக இரட்டையர் அழகுராணி, ஆணழகன் போட்டி!

இலங்கையில் முதல் முறையாக உலக இரட்டையர் ஆழகுராணி மற்றும் இரட்டையர் ஆணழகன் போட்டிகள் நடைபெறவுள்ளதாக இலங்கை இரட்டையர் அமைப்பின் நிறுவுனர் உபிலி கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், உலகில் நடைபெறவுள்ள முதன்மையும் முதலாவதுமான நிகழ்வாக இது அமைந்துள்ளது. இன்றைய நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இந்த நிகழ்வு பெரும் பலமாக இருக்கும் என உபிலி கமகே தெரிவித்தார்.

அத்தோடு இலங்கையை ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் எனவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிகழ்வை முதல் கொண்டு…

1.உலக இரட்டையர் கலாசார விழா

2.இரட்டையர் ஆழகுரானி ஜோடி மற்றும் இரட்டையர் ஆணழகன் ஜோடி

3.உலக இரட்டையர் சம்மேளனம்

4.உலக இரட்டையர் வர்த்தக மாநாடு – போன்ற நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளில் உலக இரட்டையர் ஆழகுரானி மற்றும் இரட்டையர் ஆணழகன் போட்டிகள் அனைவரும் கவரும் நிகழ்வாக இருக்கப் போகிறது. 

இந்த நிகழ்வுகளில் 30 நாடுகள் இதுவரை கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளது. மேலும் அனேக நாடுகள் பங்கேற்க உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து இரட்டையர்களுடன், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் என 4000க்கு மேற்பட்ட வெளிநாட்டினர் கலந்து கொள்கின்றனர். இதனால் எமது நாட்டுக்கு டொலர் வருமானம் அதிகரிக்க கூடும் என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

உலக இரட்டையர் ஆழகுரானி மற்றும் இரட்டையர் ஆணழகன் போட்டிக்காக இலங்கையிலிருந்து இரட்டையர் ஆழகுராணி மற்றும் இரட்டயர் ஆணழகன் 03 சோடிகளை தேர்ந்தெடுக்கும் இறுதி போட்டிகள் பெப்ரவரி இலங்கையில் முதல் முதலாக 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்காக முதல் கட்டபோட்டிகள் பெப்ரவரி 12ஆம் திகதி நடைபெறவுள்ளன.என்றார்.

Recent News