பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் முதலீடு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் பேரழிவிற்குத் திட்டமிட்டுள்ளார் என சாடியுள்ள அவர், தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்க நிதி அமைச்சரிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், பொருளாதார சவால்கள் அனைத்தும் டொலரில் தங்கி இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், நிதியமைச்சர் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, தற்போதைய நிதி அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.