Wednesday, December 25, 2024
HomeLatest Newsசென்னை விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள்!

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள்!

சுங்க அதிகாரிகளாக தம்மை இனம் காட்டிக்கொண்டு இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

47 வயதான நதிஷா ரோஷினி, திங்கள்கிழமை இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்ததாக சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கையைச் சேர்ந்த முகமது நஜ்மின், (31) மற்றும் செல்லையா அரவிந்தன், (40), என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட இருவர், நதிஷா ரோஷினியை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தினர்.

அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்து வந்ததாக தெரிவித்து, அவரிடமிருந்து நகை மற்றும் காப்புகளை இருவரும் எடுத்துச் சென்றனர்.

சந்தேகமடைந்த அவர், சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்தார். பின்னர், காவல்துறையில் புகார் அளித்தார். உடனடியாக செயற்பட்ட விமான நிலைய காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

Recent News