Monday, December 23, 2024
HomeLatest Newsஇலங்கைப் பெண்கள் ஓமானில் விற்பனை- வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கைப் பெண்கள் ஓமானில் விற்பனை- வெளியான முக்கிய அறிவிப்பு

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனைச் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலங்கைக்கான ஓமானிய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுற்றுலா வீசாவை பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பெண்களில் சுமார் 12 பேர் நேற்று முன்தினம் அங்கிருந்து பலாத்காரமாக ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த மனிதக்கடத்தல் சம்பவத்தில் இலங்கையின் விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டுள்ளதாகவும், ஓமானில் பணியாற்றும் தூதரக அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையிலேயே ஓமானில் பணியாற்றும் இலங்கை தூதரக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Recent News