Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇசை துறையில் சாதித்த இலங்கைப் பெண்..!லண்டனில் அமோக வரவேற்பு...!

இசை துறையில் சாதித்த இலங்கைப் பெண்..!லண்டனில் அமோக வரவேற்பு…!

தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தென்னிந்திய ஊடகமொன்றில் பெண் ஒருவர் இசை துறையில் சாதனை படைத்துள்ளார்.

இலங்கையின் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட நிலையில் தற்போது லண்டனில் வசித்து வரும் மாதுளானி பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

யுத்தம் காரணமாக லண்டனிற்கு இடம்பெயர்ந்து சென்ற இவர், தென்னிந்திய இசை நிகழ்ச்சியொன்றில் போட்டியாளராக தெரிவானார்.

இந்த போட்டியில் “விடை கொடு எங்கள் நாடே” என்ற ஈழத்தமிழர்களுக்கான பாடலை பாடி, அவையில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து, ஈழ தமிழர்களின் வலியை மீண்டும் ஒருமுறை உலகறிய செய்தார்.

இந்நிலையில் குறித்த இசை போட்டியில் இறுதி போட்டியாளர்களை தெரிவு செய்யும் சுற்றில் இருந்து வெளியேறிய மாதுளானிற்கு லண்டன் விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் மாதுளானிற்கு இசை துறையில் பல வாய்ப்புகள் கிடைக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recent News