Wednesday, December 25, 2024
HomeLatest Newsஓமானில் திடீரென உயிரிழந்த இலங்கைபெண்!!

ஓமானில் திடீரென உயிரிழந்த இலங்கைபெண்!!

ஓமானில், உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும் பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.

இதேவேளை, இந்தப் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை இங்கு தங்க வைக்கபட்டிருந்தவர்களில் சிலர் அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News