Tuesday, December 24, 2024
HomeLatest Newsபிரித்தானியாவில் வசிப்பதாக கூறி பேஸ்புக் ஊடாக இலங்கை பெண் செய்த மோசடி!

பிரித்தானியாவில் வசிப்பதாக கூறி பேஸ்புக் ஊடாக இலங்கை பெண் செய்த மோசடி!

பிரித்தானியாவில் வசிக்கும் பணக்கார வைத்தியராகக் காட்டிக் கொண்டு இலங்கைப் பெண் ஒருவர் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பெண் கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை இளைஞர்களுடன் முதலில் நட்பை ஏற்படுத்தி பேஸ்புக் ஊடாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தனக்கு பல தொழில்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அந்த பெண், அதில் முதலீடு செய்து தொழிலில் ஈடுபடுமாறும் இளைஞர்களை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. பெண்ணின் வார்தையில் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஏமாற்றி பொய் சொல்லி தனது தொழிலில் முதலீடு செய்ய வரும் பல இளைஞர்களுடன் சாதாரண உறவில் ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டும், இடம் விட்டு இடம் பெயர்ந்தும் திரியும் பெண், அண்மையில் கடவத்தை பிரதேசத்தில் தங்கியிருந்த போது பிடிபட்டுள்ளார்.

எனினும், தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கடவத்தை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News