Thursday, November 14, 2024
HomeLatest Newsஇலங்கை பயணிகளுக்கு சென்னையில் கொவிட் பரிசோதனை

இலங்கை பயணிகளுக்கு சென்னையில் கொவிட் பரிசோதனை

சென்னை விமான நிலையத்துக்கு நேற்று சென்ற இலங்கையைச் சேர்ந்த சில பயணிகள் உட்பட ஒரு குழுவினருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச பயணிகளின் கொரோனா சோதனை நடைமுறைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு சதவீத சர்வதேச பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

சிங்கப்பூர், கோலாலம்பூர், டுபாய், தோஹா மற்றும் இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்ற சுமார் 37 சர்வதேச பயணிகளிடம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சோதனை செய்யப்பட்டது.

எனினும் அவர்களில் யாருக்கும் இதுவரை எந்த நோய் அறிகுறியும் இருக்கவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான 1.15 இலட்சம் படுக்கைகள் உள்ளன.

அவற்றில் 72,000 படுக்கைகள் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்காக தயாராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

உலகின் சில பகுதிகளில் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Recent News