Wednesday, December 25, 2024
HomeLatest Newsசவூதி பிரஜைகளை குறிவைக்கும் இலங்கை சுற்றுலாத்துறை!

சவூதி பிரஜைகளை குறிவைக்கும் இலங்கை சுற்றுலாத்துறை!

நாட்டின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைய சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபிய பிரஜை ஒருவர் இலங்கையில் தங்கி இருக்கும் காலத்தில் நாளொன்றுக்கு 230 அமெரிக்க டொலர் செலவாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News