Friday, January 17, 2025
HomeLatest Newsஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமிலிருந்த இலங்கை தமிழ் குடும்பம் குயின்ஸ்லாந்திற்கு பயணம்

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமிலிருந்த இலங்கை தமிழ் குடும்பம் குயின்ஸ்லாந்திற்கு பயணம்

அவுஸ்திரேலியாவில் நான்கு வருடகாலம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ்புகலிடக் கோரிக்கையாளர்கள் குடும்பத்தினர் இன்று மீண்டும் குயின்ஸ்லாந்தின் பயோலா நகரிற்கு புறப்பட்டுள்ளனர்.

பேர்த் விமானநிலையத்திலிருந்து கருத்து வெளியிட்டுள்ள தாயார் பிரியா நடேசலிங்கம் தாங்கள் கடந்த 12 மாதங்களாக வசித்த மேற்கு அவுஸ்திரேலியாவின் மக்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும், பைலோவில் உள்ள எங்கள் சமூகத்திற்கு மீண்டும் பயணிப்பது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

கிறிஸ்மஸ் தீவிலிருந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட தனது மகள் தர்ணிகாவிற்கு சிகிச்சை அளித்த பேர்த் சிறுவர் மருத்துவமனைக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தமிழ் குடும்பத்தினர் இன்று குயின்ஸ்லாந்திற்கு புறப்பட்டுள்ளதன் காரணமாக அவர்களின் மகள் தர்ணிகா ஐந்தாவது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை பயோலாவில் கொண்டாடுவோம் என தெரிவித்தார்.

Recent News