Monday, February 24, 2025
HomeLatest Newsமிஸ் அவுஸ்திரேலியா பட்டம் வென்ற இலங்கை பெண்!

மிஸ் அவுஸ்திரேலியா பட்டம் வென்ற இலங்கை பெண்!

இலங்கையின் வளர்ந்து வரும் நடிகையொருவர் அவுஸ்திரேலியாவின் அழகிப் போட்டியொன்றில் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் இலங்கை சிங்கள தொலைக்காட்சி நாடக நடிகையொருவர் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனிதா பெரேரா எனும் மாடல் அழகியே இவ்வாறு அழகிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் ஸ்பெயினின் சான் ஜோஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இதில் வெற்றி பெறும் அழகிக்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சந்து கிரீடம் சூட்டவுள்ளார்.

Recent News