Thursday, December 26, 2024
HomeLatest Newsஆசியாவில் இலங்கை உணவுக்கு கிடைத்த முதலிடம்!

ஆசியாவில் இலங்கை உணவுக்கு கிடைத்த முதலிடம்!

ஆசியாவின் வீதி உணவுகள் சம்பந்தமான கருத்து கணிப்பில் இலங்கையின் அச்சாறு உணவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

ஆசியாவில் வீதி உணவுகளாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் 50 வீதமான உணவுகளை அடிப்படையாக கொண்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் இலங்கையின் இனிப்புச் சுவை, புளிப்புச் சுவை, மிளகாய் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படட் காய்கறி மற்றும் பழ அச்சாறு உணவுக்கு முதலிடம் கிடைத்துள்ளதாக CNN செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேசிய மசாலாக்கள், மிளகாய், மஞ்சள், சீனி,உப்பு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் வெள்ளிக்காய், அன்னாசி, விளாம்பழம், அம்பரகங்காய், மாங்காய், கத்தரிக்காய் ஆகிய அச்சாறு உணவுகள் இங்கு விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த கருத்து கணிப்பில் இலங்கையின் அப்பத்திற்கும் முதலிடம் கிடைத்துள்ளது.

இந்த கருத்து கணிப்பில் மலேசியாவில் மீன் மற்றும் புளி ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகையான அசாம் வக்சாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

வியட்நாமின் பான்மி, தாய்லாந்தின் தேனீர், பாகிஸ்தான் கேபாப் பனிஸ், சிங்கப்பூரின் மிளாகாய் அடங்கிய கோழி இறைச்சி உணவு என்பன ஆசியாவில் ஏனைய சுவையான உணவுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News