எல்.என்.ஜி ஆலையின் மின்சார உற்பத்தி எதிர்வரும் மே மாதம் முதல் தேசிய மின்சார அமைப்பில் சேர்க்கப்பட உள்ளது.ஆனாலும் அது செயற்பட மேலும் ஒரு வருடம் ஆகும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் எனவும், எல்என்ஜி உற்பத்திக்கு தேவையான இயந்திரத்தை உருவாக்க சுமார் ஒரு வருடம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்என்ஜி வாயு கப்பல்கள் மூலம் திரவமாக கொண்டு வரப்பட்டு, கடலோர அலகு (SSRU) மூலம் வாயுவாக மாற்றப்பட்டு கரைக்கு குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.
இந்த இயந்திரங்களை உருவாக்க சுமார் ஒரு வருடம் ஆகும் என்றும் ஆதாரங்கள் கூறுகின்றன.