Monday, January 27, 2025
HomeLatest Newsபுதிய ஒமிக்ரோன் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை! மீண்டும் முக்கவசம்?

புதிய ஒமிக்ரோன் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை! மீண்டும் முக்கவசம்?

புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில், பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் மீண்டும் முகக்கவச பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recent News