Thursday, November 21, 2024
HomeLatest Newsஇலங்கை ஸ்டைலில் யாழ்பாணத்து ஆட்டிறைச்சி கறி !

இலங்கை ஸ்டைலில் யாழ்பாணத்து ஆட்டிறைச்சி கறி !

பொதுவாக ஆட்டிறைச்சி கறி என்றாலே விரும்பாதவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள்.அந்த வகையில் இலங்கை ஸ்டைலில் யாழ்பாணத்து ஆட்டிறைச்சி கறி எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்

ஆட்டிறைச்சி மற்றும் கொழுப்பு – தேவையான அளவு

சின்னவெங்காயம் – தேவைக்கேற்ப

பெரிய வெங்ககாயம் – 2

உப்பு – தேவைக்கேற்ப

தேங்காய் எண்ணெய்

பச்சை மிளகாய் – 5

ரம்பை – 1 துண்டு

தேங்காய்பால் – தேவைக்கேற்ப

இஞ்சிப்பூண்டு விழுது- 3 டேபல் ஸ்பூன்

எலுமிச்சைப்பழம் – 1

கறுவா – சிறிய துண்டு

மசாலா பொருட்கள்
மிளகாய்ப்பொடி – 3 டேபல் ஸ்பூன்

கராம்பு , ஏலம், கறுவா காய வைத்து அரைத்துப் பொடி – 2 டேபல் ஸ்பூன்

பெருங்காயம் – 1 டேபல் ஸ்பூன்

தாளிப்புக்கு தேவையான பொருட்கள்

பெருங்காயம்

கறுவா இலை

பச்சை மிளகாய்

ரம்பை இலை

சின்ன வெங்காயம்

பெரிய வெங்காயம்

தயாரிப்பு முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையானளவு எண்ணெய் விட்டு சிறிது சூடாகியதும் அதில் தாளிப்புக்கு கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் வதங்கியதும் இதில் இஞ்சிப்பூண்டு விழுதை சிறிது சிறிதாக சேர்த்து விட்டு கரண்டியால் கொஞ்சம் கிளறி விட்டு அதில் கறிக்குத் தேவையான இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும்.

நன்றாக இறைச்சியுடன் வெங்காயத்தை கழந்துவிட்டு அதில் கறுவா பட்டையை நறுக்கிப் போட வேண்டும். 2 டம்ளர் தண்ணீர் விட்டு சுமார் 10 நிமிடங்கள் மூடிப் பொட்டு மூடி வைக்க வேண்டும்.

10 -15 நிமிடங்களுக்கு பின்னர் மூடியை திறந்து அதில் தேவையானளவு தேங்காய் பால், சரக்கு பொருட்களை சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடங்களுக்கு பின்னர் கொழுப்பு இறைச்சி மற்றும் தேவையானளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக மூடி வைத்துவிட்டு திறந்தால் கமகம வாசணையுடன் சுடச் சுட ஆட்டிறைச்சி இறைச்சி கறி தயார்!

Recent News