Thursday, April 25, 2024
HomeLatest Newsபொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை !

பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை !

ஐ.நா மனித உரிமைச் பேரவையின் 50வது கூட்டத் தொடரில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜூன் 13, 2022 அன்று சபையில் கூறியதானது, தமிழ்மக்களுக்கு எதிராக சிறிலங்காவினால் இழைக்கப்பட்ட கொடுங்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதைத் தவிர்ப்பதற்காக, சபையை தவறாக வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை எச்சரித்துள்ளது.

தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியதை மறைக்க, சிறிலங்கா தனது தற்போதைய பொருளாதாரப் பேரழிவை முன்னிறுத்துவதனை ஐ.நா பேரவையும், சர்வதேச சமூகமும் அனுமதிக்க கூடாது வலியுறுத்துகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசின் உரைக்கு பதிலுரையாக விரிவான அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், பாரிய இராணுவச் செலவீனங்கள், 21வது திருத்தச் சட்ட மாயை, சிங்கள அரசியல் சமூகத்தின் இனவாதம், மோசமான பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், மக்களுக்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை உட்பட சிறிலங்காவின் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளதோடு, பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு என தெரவித்துள்ளார்.

Recent News