Thursday, January 23, 2025
HomeLatest Newsஆடை ஏற்றுமதியில் சாதனை படைத்த இலங்கை !

ஆடை ஏற்றுமதியில் சாதனை படைத்த இலங்கை !

நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் இருந்தபோதிலும், ஆடை ஏற்றுமதி தொழில் பாதிக்கப்படவில்லை என இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, 2022 செப்டெம்பரில் 451.46 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆடைகளை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 430.43 மில்லியன் டொலர்களாக இருந்தது.

ஏற்றுமதி மதிப்புகளில் 4.88%வருடாந்த அதிகரிப்பு இருந்தாலும், 2022 ஆம் ஆண்டின் முந்தைய ஆகஸ்ட் மாதத்தை விட நாடு 15.57% சரிவைச் சந்தித்துள்ளது.

மொத்த ஏற்றுமதியில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 186.27 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டது, இது செப்டெம்பர் 2022 இல் வருடாந்த அடிப்படையில் 4 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு செப்டெம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 15.69 சதவீதம் அதிகரித்து 141.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

2022 ஜனவரி முதல் செப்டெம்பர் வரை ஒட்டுமொத்தமாக, ஆடை தயாரிப்புகள் மூலம் இலங்கை 4.30 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டியுள்ளது, இது 18.46% அதிகரிப்பாகும்.

Recent News