Wednesday, December 25, 2024
HomeLatest Newsஆசியாவிலேயே புதிய சாதனை படைத்த இலங்கை! எதற்கு தெரியுமா

ஆசியாவிலேயே புதிய சாதனை படைத்த இலங்கை! எதற்கு தெரியுமா

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு – 9 வீதமாக இருக்கிறது. இதனால், அடுத்த ஆண்டின் 6 மாதத்துக்குள் 2 இலட்சம் தனியார் துறையினர் பணிகளை இழப்பார்கள் என்று ஆய்வு மூலம் அறிய வந்துள்ளது.

நிதி அமைச்சு நடத் திய சமீபத்தைய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

அத்துடன், ஆசியாவிலேயே அதிக சதவீத அரச பணியாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில், உலகில் பாதுகாப்புக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் இலங்கை 10ஆவது இடத்தில் இருக்கிறது.

பாதுகாப்புக்காக வடகொரியா, அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் தங்கள் வரவு – செலவு திட்டத்தில் அதிக நிதியை ஒதுக்குகின்றன.

இலங்கையும் அதிக நிதியை பாதுகாப்புக்காகவே ஒதுக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே அதிக சதவீத அரச பணியாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது. நாட்டின் பணியாளர்களில் 18 வீதத்தினர் அரச பணியாளர்கள்.

ஆனால், மிகவும் வளர்ந்த மலேசியாவில் அந்த சதவீதம் 14. மியன்மாரில் 5. ஒட்டுமொத்த ஆசியாவில், மற்ற நாடுகளில் உள்ள அரசு பணியளார்களின் விகிதம் 10வீதமாகும் – என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தனித்துவமான பொருளாதார தரவுகளை குறிப்பிடும் கணக்கெடுப்பு அறிக்கையானது, நிதியமைச்சுடன்
இணைந்து நாட்டில் உள்ள பிரபல தனியார் பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டுள்ளது.

Recent News