Sunday, January 26, 2025
HomeLatest Newsஐந்தாவது இடத்தைப் பிடித்த இலங்கை! – எதில் தெரியுமா?

ஐந்தாவது இடத்தைப் பிடித்த இலங்கை! – எதில் தெரியுமா?

உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கேயின் சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் காணப்படுகிறது.

உலகிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக ஜிம்பாப்வே கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து கியூபா, வெனிசுலா, துருக்கி மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன.

இதற்கு முன்னர் இந்த பட்டியலில் முதலாம், மூன்றாம் இடங்களில் இருந்த இலங்கை தற்போது 5ஆம் இடத்தை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளது.

விரைவில் இலங்கையின் பணவீ்க்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News