“சில நாடுகள் அருகில் அல்லது தொலைவில் இருக்கலாம். பல்வேறு அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்து இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மிதித்து, அசௌகரியங்களுக்கு அவை உள்ளாக்கி வருகின்றன” – என்று சீனத் தூதுவர் ஷி ஷென் ஹொங் கூறியுள்ளார்.
சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையின் ஊடாக அவர் இதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.
“இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாட்டு மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது. நாங்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்குவோம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக பேசப்படும். இலங்கை மக்கள் ஏற்கனவே கடும் பொருளாதார மற்றும் மனிதாபிமான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தநிலையில், எப்போதும் மனித உரிமை சம்பந்தமாக உபதேசம் செய்யும் நாடுகள் உண்மையில் என்ன செய்ய போகின்றன என்பது தெரியாதுள்ளது” – என்றும் சீனத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.