Friday, January 24, 2025
HomeLatest Newsஉலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை!

உலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை!

இலங்கையில் ஏற்பட்ட பாரிய சுற்றாடல் அழிவினால் 1882 இல் 83வீதமாக இருந்த வன அடர்த்தி 16 வீதமாக சுருங்கியுள்ளது. 

அத்துடன் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இறந்த யானைகளின் எண்ணிக்கை 395 என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் உலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு பல தடவைகள் குறிப்பிட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் பெரிய சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டது, ஒரு நாளைக்கு 65 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன. 2002 ஆம் ஆண்டு முதல் நாட்டில் 5.3 வீத முதன்மை காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள திருகோணமடு வனப் பகுதியில் 1,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன. வத்தேகம கெபிலித்த வனப் பகுதியின் 12,500 ஏக்கர் நிலப்பரப்பை சேனைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சியில் சமனல பகுதியில் வனப் பகுதி, சிங்கராஜா மற்றும் கல் ஓயா தேசிய வனப் பகுதிகளும் அழிக்கப்பட்டன.

இதற்கிடையில் 2021ஆம் ஆண்டே, இலங்கையின் யானைகள் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஆண்டாக கருதப்படுகிறது.

2022 ஜனவரி முதல் டிசம்பர் 5 வரை இலங்கையில் இறந்த யானைகளின் எண்ணிக்கை எண்ணிக்கை 395 ஆகும். அத்துடன் யானைகள் தாக்கியதில் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டை விட அதிகமாக 20 யானைகள் 2021இல் இறந்துள்ளன. இதன்படி தற்போது இலங்கையில் தினமும் ஒரு யானை இறக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் யானைகளின் வாழ்விடங்கள் 15வீதத்தினால் சுருங்கிவிட்டன.

அத்துடன் யானை வழித்தடங்கள், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் மாற்றப்பட்டதால் மனித-யானை மோதல் அதிகரித்துள்ளது என்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Recent News