Friday, January 17, 2025
HomeLatest Newsஇலங்கை மேலும் மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளது! ரணில் சுட்டிக்காட்டு

இலங்கை மேலும் மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளது! ரணில் சுட்டிக்காட்டு

நாடு இனி வரும் காலங்களிலேயே மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

மேலும், யுக்ரேன் மீதான போரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் ஆரம்ப கட்டத்திலேயே இலங்கை தற்போது காணப்படுவதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டுக்கான உணவு பொருட்கள் விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதம் வரை போதுமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெரும்போகம் மற்றும் சிறுபோகத்திற்கு போதுமான உரம் காணப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பெரும்போகத்திற்கான உரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு உரம் கிடைக்கப்பெற்றால் எதிர்வரும் ஆண்டின் பெப்ரவரி மாதம் வரை சமாளிக்கக்கூடியதாகவிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுயமாக இலங்கையினால் இந்த ஆண்டை முழுமையாகக் கடக்க முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் விதமான சரத்துகளை அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் தவிர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News