Thursday, December 26, 2024
HomeLatest Newsஉலகளவில் கொரோனா தரவரிசைப் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலகளவில் கொரோனா தரவரிசைப் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலகளவில் கொரோனா தரவரிசைப் பட்டியலில் இலங்கை 80 வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்க 6 இலட்சத்து 70 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது.

இவர்கயில் 6 இலட்சத்து 53 ஆயிரத்து 776 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதேநேரம், இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 759 ஆக பதிவாகியுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் உலகளவில் கொரோனா தரவரிசைப் பட்டியலில் இலங்கை 80 வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

Recent News