Wednesday, December 25, 2024
HomeLatest Newsகொரோனாத் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை!

கொரோனாத் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை!

ஒரு தொகுதி கொரோனாத் தடுப்பூசிகளை இலங்கை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியாகும் நிலையில் காணப்படும் தடுப்பூசிகளே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட உள்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் காலாவதியாகும் ஒரு தொகுதி கொரோனாத் தடுப்பூசிகள் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இலங்கையில் சுமார் எட்டு மில்லியன் கொரோனாத் தடுப்பூசிகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதமளவில் இந்த எட்டு மில்லியன் தடுப்பூசிகளையும் பயன்படுத்தி விட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநேகமான இலங்கையர்கள் கோவிட் 3ம் மற்றும் 4ம் தடுப்பூசிகளை இன்னமும் ஏற்றிக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை மாதம் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News